காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார்,சட்டவிரோதமாக வைத்திருந்த 3,492 போதை மாத்திரைகளுடன் 36 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், போதை மாத்திரைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருதாக பொலிசார் தெரிவித்தனர்
