மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரி, தலங்கம பொலிஸில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.

நிவிதிகல, உடகரவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும், அவரது சகோதரர் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் பெண்ணும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டடுள்ளது.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய நிலையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக நிவிதிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.