யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பெண்ணிடம் இருந்து ஐஸ் போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , பெண் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பெண்ணை பொலிஸார் யாழ் . நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து , பெண்ணை 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.