பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் ( 25 )மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
சிறிநேசன் ஊடக சந்திப்பொன்றின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது என்று கருத்து தெரிவித்தன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவித்ததாவது,