சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால வட்டாரத்தில் சடுதியாக முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் வினவிய வேளை, முட்டை ஒன்று 30 ரூபாய் விற்கப்படுவதாகவும், 25 ரூபாய் என்று குறிப்பிடப்படும் முட்டை அளவில் சிறியது எனவும் சுட்டிக்காட்டினார்.