Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

9 தீவிரவாத முகாம்களில் 100 க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்; இந்தியா

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஒபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய இராணுவத்தின் தலைமை பணிப்பாளரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் ராஜீவ் கயி இன்று( 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது: “ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம், தீவிரவாதச் செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தீவிரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய தேசம்தீவிரவாதச் செயல்களை சகித்துக்கொள்ளாது என்பதையே மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்”.

”இந்தியாவிலுள்ள வெவ்வேறு உளவுப் பிரவுகளின் உதவியால் தீவிர ஆய்வுக்குப் பின், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் இருக்கும் பல இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருந்தன. இவற்றை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம்.

மே 7 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சண்டையில் பாகிஸ்தான் இராணுவத்தில் 35 – 40 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

மே 8 – 9 இரவில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ட்ரோன்களையும் போர் விமானங்களையும் ஏவியது.

மே 9 – 10 இரவில், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் இந்திய வான்வெளிக்குள் ஊடுருவும் முயற்சி இந்திய விமானப் படை மற்றும் இராணுவத்தின் வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்திய இராணுவ தளங்களைக் குறிவைத்து அவர்கள் மேற்கொண்ட நகர்வுகள் தோல்வியைச் சந்தித்துள்ளன”.என்று கூறியுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு