அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய தங்க அட்டை விசாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
குறித்த விசா 5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த அதிக விலையிலும் குறித்த விசாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த விசா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,000 தங்க அட்டை விசாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பலர் இந்த தங்க அட்டை விசாவை வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.