முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அவர் இன்று (25) மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.