புதிய இணைப்பு
நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகை தந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
முதல் இணைப்பு
மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வருகைதந்த ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு அண்மையில் தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையிலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதையை விட்டு விலகியதால் புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக கூறப்படுவதுடன், இதனால் இரண்டு நாட்களுக்கு புகையிரத சேவை பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
