தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மானை அரசாங்கம் தவறானவர் என சித்தரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தது. எனினும், அதன் பின்னர் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவோருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மானை தவறானவர் என்கின்றனர்.
அப்படியாயின், அமைப்பில் இருந்தோர் சரியானவர்கள் என அரசாங்கம் மறைமுகமாக கூற வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.