மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (25) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பகுதியொன்றில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்துக்காக வைத்திருந்த 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை கைப்பற்றியதுடன், 28 வயதுடைய வியாபாரியை கைது செய்து ஒப்படைத்துள்ளனர்