கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காக சில விசமிகள் பனை மரங்களை அழித்தொழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பனைகள் சில நாட்களில் அழிக்கப்பட்டு குறித்த இடம் பாலைவனமாகி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
இது சம்மந்தமாக பனை அபிவிருத்தி அதிகார சபை உட்பட்ட அதிகார மட்டங்களுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இயக்கச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

