எட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம்நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுளம்பு பெருக்கம் அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற் திட்டம் 29 வரை செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வீடுகள், பாடசாலைகள், பணிபுரியும் இடங்கள் , தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும்.
அதேவேளை, சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு பொதுமக்களை சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ் ஆண்டு இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.