ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஆனைக்கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டனின் ஸ்டேடன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து ஆனைக்கொய்யா பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் கெப் வண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
