‘சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்.’
என்ற தொணிப்பொருளில் சர்வதேச பழங்குடிகள் தினம் நேற்று வாகரை குஞ்சன் கல் குளத்தில் தங்களது கலை கலாச்சார நிகழ்வுகளுடன் நினைவு கூறப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் அமையத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
பழங்குடியின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வானது மங்கள விளக்கேற்றல், குல தெய்வ வழிபாட்டுடன் ஆரம்பமானது.
தலைமை உரையை பழங்குடித் தலைவர் ந.வேலாயுதம் உரையாற்றினார்.அவர் தமது உரையில் வருகை தந்த அதிதிகளை விழித்துக் கொண்டு எதிர்வரும் 8.8.2023.ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உலக பழங்குடிகள் தின நிகழ்வின போது அங்கு வருகை தரும் பழங்குடி தலைமைகளிடம் பிரதானமான தமது தேவைகளை முன்வைத்து கலந்துரையாடுவதற்கான விடயங்களை கண்டறியும் தினமாகவும் சந்திப்பாகவும் இன்றைய தினம் அமையப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சிவில் அமையத்தின் தலைவர் ஜே.கோபிநாத் இன்றைய நிகழ்வின் சிறப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். பின்னர் அதிதிகள் சிறப்புரையாற்றினார்கள்.கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத்துறை தலைவர் ஜி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு பல்கலைக் கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் மற்றும் நூல் ஆய்வாளர்களால் இலங்கையில் உள்ள பழங்குடியினர் தொடர்பான வாழ்வியல் விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல்கள்,ஆவணங்கள் என்பன பழங்குடித் தலைவரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவற்றினை பாதுகாப்பாக வைத்திருக்க ஆவணக் காப்பகம் ஒன்றும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.பழங்குடி மக்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வேண்டி கிழக்கு மாகாண ஆளுநருக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டது. நிகழ்வில் அதிதிகளாக மதகுரு சிவஸ்ரீ ம.ரெயினு சர்மா,கிழக்கு மாகாண மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இணைப்பாளர் ஏ.எல்,இஸடின்,கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் தலைவர் ஜி.விக்னேஸ்வரன்,விரிவுரையாளர் யு.வி.தங்கராசா, மட்டக்களப்பு வன வள பாதுகாப்பு அதிகாரி,அருண, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிராசேவகர் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் துறை கற்கை நெறி மாணவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.