Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பிரதேசங்களில் புத்தரின் வருகைகள் அதிகரிப்பு; மயிலத்தமடுவில் மீண்டும் காடழித்து குடியமர்ந்த புத்தர்! (காணொளி)

தமிழர் பிரதேசங்களில் புத்தரின் வருகைகள் அதிகரிப்பு; மயிலத்தமடுவில் மீண்டும் காடழித்து குடியமர்ந்த புத்தர்! (காணொளி)

2 years ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாதவனை மயிலத்தமடு பகுதியில் 2019 இல் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் உருவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகள் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தமை பல ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவனையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேய்ச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
இறைபதம் அடைத்தார் அமரர். திருமதி. கிறிஸ்தி அன்னலெட்சுமி!

இறைபதம் அடைத்தார் அமரர். திருமதி. கிறிஸ்தி அன்னலெட்சுமி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.