தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள வடக்கு தமிழ் எம்.பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை அதனாலேயே ஆனையிறவு உப்பளம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (29) ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கபட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
சோறு உண்ணும்போது உப்பு போட்டு உண்ணாத வடமாகாண தேசிய மக்கள் சக்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சமர்பணம்.

மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகமான ஆனையிறவு உப்பளம் இன்று நேற்றல்ல பல் நெடுங்காலமாக ஆனையிறவு உப்பு என்ற வரலாற்றை கொண்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்திலும் இந்த உப்பளம் பொருண்மிய மேம்பாட்டு பிரிவால் இதே பெயரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது . ஆனால் இன்று ‘ரஜலுணு’ உப்பு என்ற சிங்கள பெயருடன் சந்தைக்கு வருகிறது.
கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உப்பு உற்பத்தியை ஆரம்பித்து வைத்தார். அன்றைய ஆனையிறவு உப்பு தான்,இன்று “ரஜலுணு” என பெயர் மாற்றம் பெற்றது.

காரணம் தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள வடக்கு தமிழ் எம்பிக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை அதனால் இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.
யாரோ பெற்ற பிள்ளைக்கு தமிழில் கூட பெயர் வைக்கமுடியாத வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
