தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே. நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தான் நீதி பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 37வது நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அன்னாரினது சமாதியில் கடந்த (27) காலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன் பொது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அந்த பாட்டலந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 90வீதமானவர்கள் ஜேவிபி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். அவ்வாறான நிலைமையில் இவர்கள் இன்று ஆட்சி பீடம் ஏறி இருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்களுக்கு தங்களுக்கு இருக்கக்கூடிய தங்களுடைய அரச கட்டமைப்பின் ஊடாக நீதி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது அவர்கள் நேர்மையாக செயல்பட்டார்களாக இருந்தால். நிச்சயமாக நடைபெற்ற அந்த அநீதிகளுக்கு நீதி கொடுக்கப்பட வேண்டும்.
ஊடகங்கள் கூட அந்த சம்பவங்களை பூரணத்துவத்துடன் வெளிப்படுத்த போவதில்லை பட்டலந்தையில் இடம் பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவருகின்ற போது மிகவும் ஒரு பயங்கர கோபம் வருகின்றது.

இவர்களுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்த சம்பவங்களுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கில் 50-60 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பேரணவாதிகள், தமிழ் மக்களுக்கு எதிராக செய்த சம்பவங்களை ஆய்வு செய்து, அடுக்கிடுவார்களாக இருந்தால் நான் நினைக்கின்றேன் 30 வருடங்கள் ஊடகங்கள் தொடர்ச்சியாக அந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்க முடியும் அந்த அளவிற்கு கொடூரங்கள் நடைபெற்றிருக்கின்றது-என்றார்.
அதேசமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
