கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அந்த ஹோட்டலில் அறையில் ஒன்றில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் தினமும் நினைத்து வேதனைப்படுகிறேன்” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இறந்தவரின் அடையாளம் குறித்தும் உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டைப் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.