மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மியன்மாரின் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தினால் மியன்மாரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இஸ்லாமிய குழுவைச் சேர்ந்த உறுப்பினர் துன் கி என்பவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.