கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளை எடுத்து கொண்டு வந்த வியாபாரி ஒருவரை சம்பவதினமான நேற்று (31) இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.