அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் அரச அச்சுத் திணைக்களத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அரச அச்சுத் திணைக்களத்திற்கு உள்ளே விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச அச்சுத் திணைக்கள ஆணையாளர் கே.ஜீ.பீ புஷ்பகுமாரவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி தொடக்கம் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.