அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளிற்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீனாவின் வர்த்தக அமைச்சர் , அமெரிக்க வர்த்தக விவகாரங்களிற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதோடு நாங்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்,சீனா தனது நலநன உரிமைகளை பாதுகாப்பதற்காக உரிய பதில் நடவடிக்கையை எடுக்கும் என்றும் சீனாவின் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.