பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.