Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டார் கிரிக்கெட் தொடரில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார் கிரிக்கெட் தொடரில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

கட்டார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 ரமலான் வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார்.

கட்டார் ஆசிய நகர சர்வதேச கிரிக்கெட் மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14 மிக பலம் பொருந்திய முன்னணி (பிரீமியம் கிளப்) கழகங்கள் போட்டிபோட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர்.

இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நாட்டினை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இத் தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் கடமையாற்றினர். இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினை பிரதி நிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனார்.

இப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஒரே ஒரு நடுவர் என்பதுடன், இளம் வயது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இவர் சிறப்பான முடிவுகளையும், சிறந்த தீர்ப்புகளையும் வழங்கியதன் காரணத்தால் league போட்டிகள், காலிருத்திப் போட்டிகள், அரையிருத்திப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குமான மிக முக்கியமான போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றினார் என்பதும் சிறப்பம்சமாகும்.

இவ் இறுதிப் போட்டிக்கு இவருடன் இணைந்து பாக்கிஸ்தான் நாட்டினை சேர்ந்த நடுவரும் இணைந்து கடமையாட்டினார்.

இப்போட்டிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இவ் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கட்டார் கிரிக்கெட் வாரியம் செயலாளர் அவர்களுடன் மிக முக்கிய அதிதிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுக்களையும் வழங்கிவைத்தனர்.

இத் தொடருக்கு கட்டார் நாட்டின் பிரபல நிறுவங்கள் அனுசரணை பிரதான அனுசரணை வழங்கி இருந்தது.
இவர் கத்தார் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகின்ற டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள், பல்கலைக்கழங்களுக்கு இடையிலான போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் தனது திறமையினால் குறிப்பிட்ட வருடங்களுக்குள் மிக சிறப்பான முறையில் நடுவராக கடமையாற்றி வருகின்றார்.

கட்டார் கிரிக்கெட் சபையில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட நடுவர்கள் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் இன்னும் சில மாதங்களில் கட்டார் கிரிக்கெட் சபை சார்பாக ICC யினால் நடாத்தப்பட இருக்கின்ற தரம் -2 பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பாம்சமாகும்.

இவர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தரம் – 4 நிலை நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் 2ம் நிலை நடுவராகவும் கடமையட்டுகின்றார்.

இவர் கடந்த வருடம் நடை பெற்ற தரம் 3 நடுவர்களுக்கான பரீட்சையில் தன்னுடைய வெளிநாட்டு பயணம் காரணமாக தோற்ற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் தற்போது கட்டார் நாட்டில் சார்பு பிரிவு (pro divison) கிரிக்கெட் நடுவராக இலங்கை நாட்டின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஒரே இளம் வயதுடைய நடுவர் என்பதும் விசேட அம்சமாகும்.

மேலும் இவர் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நற்பிட்டிமுனை NCC விளையாட்டு கழகத்தின் தலைவரும், தற்போது கட்டார் நாட்டில் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார் என்பதோடு இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருமாக இருக்கிறார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

May 25, 2025
மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
Next Post
பட்டலந்த விவகாரம் தொடர்பில் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு

பட்டலந்த விவகாரம் தொடர்பில் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.