கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
கடந்த மாதம் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தாக்குதலுக்குள்ளான 20 வயது நிலாக்சி ரகுதாஸ் (மார்க்ஹாம்) என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஏக்வோன் முர்ரே (28) மற்றும் ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சாட் (35) ஆகியோரை அந்நாட்டு பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இதற்கமைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.