Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (04) இரவு வந்தடைந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ நூற்றாண்டுகளின் நட்பு வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.

அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.