புலம்பெயர்ந்துவாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள், மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வந்து முதலீடுகளை செய்து கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களைப் போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.
தற்போதைய ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க கிழக்கில்அதிகளவான வளர்ச்சிப்பணியை
முன்னெடுக்குமாறுதனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலயத்தில்சனிக்கிழமை (05) மாலைநடைபெற்ற சுவிஸ் நாட்டைசேர்ந்த கல்லாறு சதீஸின்‘பனியும் தண்டனையும்’நூல்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர்செந்தில் தொண்டமான்தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் தென்னிந்தியாவின்திரைப்பட தயாரிப்பாளரும்பதிப்பாளருமான மு.வேடியப்பன் பிரதமஅதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், “மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்லவழிகள் ஏற்படுத்திக்
கொடுக்கப்படவேண்டும். கல்வியை அவர்கள் பற்றுடன் முன்னெடுக்ககூடிய வகையில்அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கிழக்கு மாகாணம்யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 30வருடமாக இலங்கை அரசாங்கத்தினால் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு எனக்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தினை ஏனையமாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவரவேண்டிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் இங்கிருந்து புலம்பெயர்ந்துசென்றுள்ளவர்கள்மீண்டும் இங்குவருவதற்கு
முன்னுதாரணமாக இங்கு வந்துள்ளார் .புலம்பெயர்ந்துசென்றவர்கள் இங்கு
முதலீடுகளை செய்துதொழில்துறையினையும் அபிவிருத்திகளையும் செய்யவேண்டும்.
இது உங்களின் பிரதேசம், உங்களது நாடு. மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவருவதற்கு அவர்களின்
முழுமையான ஒத்துழைப்பு தேவை” என்றார்.