அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20இல் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதிக்க முடிவு செய்தார்.

அதன்படி இதற்கு ஏற்ப ஏப்ரல் 2 ஆம் திகதி முதல், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆடம்பர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பிரிட்டனின் கோவென்ட்ரியில் உள்ள விட்லியில் உள்ளது. கடந்த ஆண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், தனது உற்பத்தியின் கால் பங்கினை வட அமெரிக்காவில் தான் விற்பனை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.