ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தறையிறக்கப்பட்டுள்ளது.
227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது.
அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க விமானி அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் விமானம் ஸ்ரீநகரை அடைந்தபோது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.