கடற்பசு (டுங்கோ டுங்கோ) இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர்.
மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, கடற்பசு இறைச்சியுடன் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வங்காலை , அக்னேஷ்புரத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோகிராம் கடற்பசு இறைச்சியை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
