நீண்ட தூரம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதி செய்து தரும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பேருந்து சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது
அந்தந்த உணவகங்களில் உணவு அசுத்தமாக இருப்பதாகவும், கழிவறை வசதிகள் தரமில்லாமல் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பல வருடங்களாக உணவு, பான பிரச்சினை, சுகாதார பிரச்சினை என்பன தொடர்கின்றன.