பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான கைதிகள் அரசியல் மயப்படுத்தப்பட்டவை என்பதனை ருஷ்டியின் கைதும், அநுர குமார திஸாநாயக்கவின் 90-நாள் தடுப்புக்காவல் உத்தரவும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறது.
பொலிஸ் மறுசீரமைப்பும், பயங்கரவாத தடைச் சட்டமும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள்.
அநுர தலைமையிலான வாய்ச்சவடால் அரசாங்கம், இதுவரை சொன்ன புழுகுகளிலிருந்து தன்னை சிறிதளவாவது மீட்டுக்கொள்ள வேண்டுமெனில், இதனையாவது உள்ளூராட்சி மன்ற தேர்தலுகள் முடிவடைந்தும் மேற்கொள்ள வேண்டும்.

சித்திரவதை
இலஞ்சம்
ஊழல்
தடுப்புக்காவல் படுகொலை
அதிகார வரம்புமீறல்
எதேச்சதிகாரமான கைதுகள்
என இலங்கை பொலிஸாரினால் புரியப்படுகின்ற குற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது.
ஒட்டுமொத்தமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக மேற்கொள்ளப்படுகின்ற ‘பயிற்சிகள்’ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் எவர் கையிலும் ஆபத்தானது என்பதனை ‘மனிதருள் மாணிக்கம்’ என தங்களை உருவகிக்கின்ற அநுர குமார தலைமையிலான ‘தோழர்களும்’ நிரூபித்துள்ளனர்.
மற்றபடி இலங்கை, இலங்கையாகவே இருக்கிறது.