ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மலையாளத்திலிருந்து மோகன் லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்கள் தவிர வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்
ரஜினிகாந்திற்கும், நெல்சன் திலீப் குமாருக்கும் இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்வியால் அதிகமாகவே கிண்டல் செய்யப்பட்டார். சில இடங்களில் அவமானத்தையும் சந்தித்தார்,. அதேபோல்தான் ரஜினிகாந்த்தும்; தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்ததால் அந்த படங்களும் மீம் மெட்டீரியலாக மாறின. இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படமானது வெளியாகவுள்ளது.
படத்துக்கான டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் தொடங்கியது. இந்தியாவில் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் வரிசையாக இரண்டு படங்களை தோல்வி படங்களாக கொடுத்த பிறகு ஜெயிலரில் நடித்திருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அதனையொட்டி டிக்கெட்டுகளையும் சரசரவென புக் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அமெரிக்காவில் மூன்று வாரங்களுக்கு படமானது ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்லவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை ரஜினிகாந்த் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது எப்போதெல்லாம் இமயமலை சென்றிருக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த படங்கள் மெகா ஹிட் ஆகியிருக்கின்றன என்ற பேச்சும் இண்டஸ்ட்ரியில் ஓடுவது கவனிக்கத்தக்கது. ஜோடி, ரட்சகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட அதைத்தான் தெரிவித்திருந்தார். எனவே ரஜினிகாந்த் இப்போது இமயமலை செல்வதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள், தலைவருக்கு ஒரு ஹிட் பார்சல் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்
தற்கிடையே வியாபாரத்தில் விஜய்தான் இப்போது நம்பர் ஒன் எனவே அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு ஓடிய நேரத்தில் ஜெயிலரின் ஹுக்கும் பாடல் நேரடியாக விஜய்யை தாக்குவதாக கருதப்பட்டது. அதேபோல் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காக்கா கழுகு கதையில் காக்கா என்று ரஜினி விஜய்யை சொன்னதாகவும் அதற்கு விஜய் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுப்பார் எனவும் பேசப்பட்டது. ஆனால் ரஜினியோ அந்த கதையை கூறி முடித்த பிறகு நான் யாரையும் குறிப்பிட்டு இந்த கதையை சொல்லவில்லை என அதே மேடையிலேயே விளக்கம் அளித்து இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்குமான இந்த சண்டை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.