ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேரம் செயற்படும் சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கான டோக்கன் அட்டைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.