முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகி, உரிய வாக்குமூலம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.