Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

2 years ago
in செய்திகள்

பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து பரீட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து பாடசாலை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பாடசாலை இயங்கி வருகிறது.

இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் திகதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு பரீட்சைகள் நடைபெறுவதால் பரீட்சை எழுதுவதற்காக வகுப்பறைக்கு சிறுமி வந்துள்ளார்.

ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம் சிறுமியை 7-ம் திகதி அறிவியல் பரீட்சையும், 9-ம் திகதி சமூக அறிவியல் பரீட்சைகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த வெளியிட்டதால் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பாடசாலை வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்த தனியார் பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர், பள்ளி முதல்வர், பாடசாலை கண்காணிப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

November 3, 2026
வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!
செய்திகள்

வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!

November 3, 2026
கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
செய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

November 3, 2026
அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா
காணொளிகள்

அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

November 3, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!
செய்திகள்

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

November 3, 2026
Next Post
குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு