முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவருடைய வழமையான நரித்தந்திரத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க முயற்சி செய்தது தற்போது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரணில் சீயா என்று சிங்கள மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய பாதுகாப்பு அதிகாரி ஊடாக (PSO) குற்றப்புலனாய்வு அதிகாரி (CI) மாதவ குணவர்த்தனவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தினிடம் பேசுவதற்கு தனக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு அச்சுறுத்தலுடன் கூடிய பலவந்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பானது ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட தொலைபேசி ஊடாகவே மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி தொலைபேசி அழைப்பானது ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவசவினாலே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு தரப்பால் மேற்கொண்ட முயற்சியை குற்றப்புலனாய்வு துறையினர் நிராகரித்து விட்டனர்.
ரணிலின் மேற்படி முயற்சியானது இலங்கையின் சட்டவிரோதமானது என்பதுடன் பிடியாணை பிறப்பிக்கப்படாமல் கைது செய்யக்கூடிய குற்றச்சாட்டு என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசியல் யாப்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அதிகாரத்தை மூலாதரமாக கொண்டு மேற்படி சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டவரின் அனைத்து சலுகைகளையும் இரத்து செய்ய பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட்டதனால் அவரை அதே சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக கிடைத்த தகவல்களில் படி சட்ட ஒழுங்கு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் நீதிக்கு புறம்பான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு தொடர்பாக தொலைபேசி உரையாடல்கள் பரீசிலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடானது ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியினரிடையே மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அதேவேளை மிகபெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ரணில், நாமல், பிள்ளையான், இனியபாரதி, சுரேஸ்சலே, போன்றோர் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொள்ள மேற்கொண்ட முயற்சியும் பிள்ளையானால் குற்றப்புலனாய்வு துறையினருக்கு வழங்கிய வாக்குமூலம் /ஈஸ்டர் குண்டு தாக்குதல் பற்றிய தகவல்கள் கசிந்ததின் அடிப்படையில் அதை திசைமாற்றவேண்டிய ஆலோசனையை வழங்குவற்காகவே ரணிலின் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.