Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

லைக்கா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைப்திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.

பின்னர், இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அவரும் நேரில் ஆஜரானார். அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா இன்று தீர்ப்பளித்தார். லைக்கா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை
செய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

September 4, 2026
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

September 4, 2026
திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை
செய்திகள்

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

September 4, 2026
பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!
செய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

September 4, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

September 4, 2026
நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 4, 2026
Next Post
ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்

ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு