கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம் களவாடப்பட்டது. இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்றோம்.

சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் அது இளவாலை பொலிஸ் பிரிவுக்குள் வரும் என கூறினர்.
ஆகையால், நாங்கள் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்றோம்.