இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என அமெரிக்க மசாலாப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதித்திருந்தார். பின்னர், அந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரி சலுகை வழங்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் இலவங்கப்பட்டை தொடர்பான பொருட்களில் 15% அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அத்துடன், இலங்கையின் இறப்பர் தொடர்பான பொருட்களில் 33% மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்களில் 18% அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.