ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களில் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வரவழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த மனிதப்படுகொலைகள்.

1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956. (150 பேர் உயிரிழப்பு)
2 1956 இனப்படுகொலை 01.05.1958. (300க்கு மேல் உயிரிழப்பு)
3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. (9 பேர் உயிரிழப்பு)
4 1977 இனப்படுகொலை 1977. (1500 க்கு மேல் உயிரிழப்பு)
5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. (25 பேர்உயிரிழப்பு)
6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் (90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின)
8 1983 இனப்படுகொலை 23.07.1983. (3000 க்கு மேல் உயிரிப்பு)
9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. (35 பேர் உயிரிழப்பு)
10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. (51 பேர் உயிழப்பு)
11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. (55 பேர் உயிரிழப்பு.)
12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. (19 பேர் உயிரிழப்பு)
13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. (9 பேர் உயிரிழப்பு)
14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
15 திக்கம் படுகொலை 16.09.1984.(16 பேர் உயிரிழப்பு)
16 ஒதியமலை படுகொலை 01.12.1984. (32 பேர் உயிரிழப்பு)
17 குமுழமுனை படுகொலை 02.12.1984. (6 பேர் உயிரிழப்பு)
18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. (52 பேர் உயிரிழப்பு)
19 மன்னார் படுகொலை 04.12.1984. (200 க்கு மேல் உயிரிழப்பு)
20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. (131 பேர் உயிரிழப்பு)
21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. (17 பேர் உயிரிழப்பு)
22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. (52 பேர் உயிரிழப்பு)
23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. (30 பேர் உயிரிழப்பு)
24 வல்வை 85 படுகொலை 10.05.1985. (70 பேர் உயிரிழப்பு)
25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- (50 பேர் உயிரிழப்பு)
26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. (36 பேர் உயிரிழப்பு)
27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- (150 பேர் உயிரிழப்பு)
28 திரியாய் படுகொலை 08.08.1985. (10 பேர் உயிரிழப்பு)
29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. (383 பேர் உயிரிழப்பு)
30 வயலூர் படுகொலை 24.08.1985. (50 பேர் உயிரிழப்பு)
31 நிலாவெளி படுகொலை 16.09.1985. (30 க்கு மேல் உயிரிழப்பு)
32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. (11 பேர் உயிரிழப்பு)
33 கந்தளாய் படுகொலை 09.11.1985. (6 பேர் உயிரிழப்பு)
34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. (30 பேர் உயிரிழப்பு)
35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. (9 பேர் உயிரிழப்பு)
36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. (12 பேர் உயிரிழப்பு)
37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 (130 பேர் உயிரிழப்பு
38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 (20பேர் உயிரிழப்பு)
39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986 (18) / 10.11.1986 (24) பேர் உயிரிழப்பு
40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 (5பேர் உயிரிழப்பு)
41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல் உயிரிழப்பு
42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 (33பேர் உயிரிழப்பு)
43 செருவில் படுகொலை 12.06.1986 (21பேர் உயிரிழப்பு)
44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. (34பேர் உயிரிழப்பு)
45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 (7பேர் உயிரிழப்பு)
46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 (48பேர் உயிரிழப்பு)
47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 (17பேர் உயிரிழப்பு)
48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 (14பேர் உயிரிழப்பு)
49 அடம்பன் படுகொலை 12.10.1986 (20பேர் உயிரிழப்பு)
50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 (2பேர் உயிரிழப்பு)
51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 (133பேர் உயிரிழப்பு)
52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 (17பேர் உயிரிழப்பு)
53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 (13பேர் உயிரிழப்பு)
54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 (40பேர் உயிரிழப்பு)
55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 (5பேர் உயிரிழப்பு)
56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 (226பேர் உயிரிழப்பு)
57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 (37பேர் உயிரிழப்பு)
58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 (233பேர் உயிரிழப்பு)
59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 (137பேர் உயிரிழப்பு)
60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 (15பேர் உயிரிழப்பு)
61 பொத்துவில் படுகொலை 30.07.1990 (125பேர் உயிரிழப்பு)
62 திராய்கேணி படுகொலை 06.08.1990 (90 க்கு மேல்உயிரிழப்பு )
63 கல்முனை படுகொலை 11.08.1990 (62 பேர் உயிரிழப்பு)
64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 (60 பேர் உயிரிழப்பு)
65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 (10 பேர் உயிரிழப்பு)
66 கோரவெளி படுகொலை 14.08.1990 (15 பேர் உயிரிழப்பு)
67 சேனகன் படுகொலை 26.08.1990 (4 பேர் உயிரிழப்பு)
68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 (16 பேர் உயிரிழப்பு)
69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 (205 பேர் உயிரிழப்பு)
70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 (23 பேர் உயிரிழப்பு)
71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 (174 பேர் உயிரிழப்பு)
72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 (12 பேர் உயிரிழப்பு)
73 புல்லுமலை படுகொலை 1984- (110 பேர் உயிரிழப்பு)
74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 (28 பேர் உயிரிழப்பு)
75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 (9 பேர் உயிரிழப்பு)
76 வங்காலை படுகொலை 17.02.1991 (5 பேர் உயிரிழப்பு)
77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 (9 பேர் உயிரிழப்பு)
78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 (10 பேர் உயிரிழப்பு)
79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 (220 க்கு மேல் பேர் உயிரிழப்பு)
80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 (13 பேர் உயிரிழப்பு)
81 கரபோழை, முத்துக்கல் படுகொலை 1991 (97 பேர் உயிரிழப்பு)
82 வற்றாப் பளை படுகொலை 18.05.1992 (14 பேர் உயிரிழப்பு)
83 தெள்ளிப்பளை கோவில் படுகொலை 30.05.1992 (10 பேர் உயிரிழப்பு)
84 மைலந்தனை படுகொலை 09.08.1992 (50 பேர் உயிரிழப்பு)
85 கிளாலி படுகொலை 02.01.1993- (35 பேர் உயிரிழப்பு)
86 மாத்தளன் படுகொலை 18.09.1993 (20 பேர் உயிரிழப்பு)
87 சாவகக்கேசரி, சங்கத்தானை படுகொலை 28.09.1993 (30 பேர் உயிரிழப்பு)
88 கொக்குவில் கோவில் படுகொலை 29.09.1993 (3 பேர் உயிரிழப்பு)
89 குருநகர் தேவாலைய படுகொலை 13.11.1993 (13 பேர் உயிரிழப்பு)
90 சுண்டிக்குளம் படுகொலை 18.02.1994 (10 பேர் உயிரிழப்பு)
91 நவாலி தேவாலைய படுகொலை 09.07.1995 (150 பேர் உயிரிழப்பு)
92 நாகர்கோவில் படுகொலை 22.09.1995 (40 பேர் உயிரிழப்பு)
93 செம்மணி புதைகுழிகள் 1996 (400 பேர் உயிரிழப்பு)
94 கிளிநொச்சி நகர படுகொலை 1996-1998 (184 பேர் உயிரிழப்பு)
95 குமாரபுரம் படுகொலை 11.2.1996 (26 பேர் உயிரிழப்பு)
96 நாச்சிக்குடா படுகொலை 16.03.1991 (19 பேர் உயிரிழப்பு)
97 தம்பிராய் சந்தை படுகொலை 17.05.1996 (7பேர் உயிரிழப்பு)
98 மல்லாவி படுகொலை 24.07.1996 (9 பேர் உயிரிழப்பு)
99 வவுனிக்குளம் படுகொலை 26.09.1996 (4 பேர் உயிரிழப்பு)
100 கோணாவில் படுகொலை 27.09.1996 5
101 முள்ளி வாய்க்கால் படுகொலை 13.05.1997 (9 பேர் உயிரிழப்பு)
102 மாங்குளம் படுகொலை 08.06.1997 7
103 அக்கராயன் மருத்துவமனை படுகொலை 15.07.1997 (15 பேர் உயிரிழப்பு)
104 தம்பல காமம் படுகொலை 01.02.1998 (8 பேர் உயிரிழப்பு)
105 பழையவட்டக்கச்சி படுகொலை 26.03.1998 (6 பேர் உயிரிழப்பு)
106 சுதந்திரபுரம் படுகொலை 10.06.1998 (33 பேர் உயிரிழப்பு)
107 விசுவமடு படுகொலை 25.11.1998 (6 பேர் உயிரிழப்பு)
108 சுண்டிக்குளம் படுகொலை 02.12.1998 (7 பேர் உயிரிழப்பு)
109 மந்துவில் படுகொலை 15.09.1999 (29 பேர் உயிரிழப்பு)
110 பாலிநகர் படுகொலை 03.09.1999 (25 பேர் உயிரிழப்பு)
111 பாலிநகர் படுகொலை 03.11.1999 (6 பேர் உயிரிழப்பு)
112 மடு தேவாலய படுகொலை 20.11.1999 (44 பேர் உயிரிழப்பு)
113 பிந்துநுவேவ படுகொலை 25.10.2000 (28 பேர் உயிரிழப்பு)
114 மிருசுவில் படுகொலை 19.12.2000 (9 பேர் உயிரிழப்பு)
115 பேசாலை வீட்டு திட்ட படுகொலை 23.12.2005 (4 பேர் உயிரிழப்பு)
116 திருகோணமலை மாணவர் படுகொலை 02.01.2006 (5 பேர் உயிரிழப்பு)
117 மானிப்பாய் குடும்ப படுகொலை 24.01.2006 (3 பேர் உயிரிழப்பு)
118 திருகோணமலை படுகொலை 12.04.2006 (15 பேர் உயிரிழப்பு)
119 கொம்புவைத்தகுளம் படுகொலை 13.04.2006 (3 பேர் உயிரிழப்பு)
120 புத்தூர் படுகொலை 18.04.2006 (5 பேர் உயிரிழப்பு)
121 மூதூர் குண்டுவெடிப்பு 25.04.2006 (12 பேர் உயிரிழப்பு)
122 உதயன் பத்திரிகை தாக்குதல் 02.06.2006 (2 பேர் உயிரிழப்பு)
123 நெல்லியடி படுகொலை 04.05.2006 (7 பேர் உயிரிழப்பு)
124 மதுவில் கோவில் படுகொலை 06.05.2006 (8 பேர் உயிரிழப்பு)
125 அல்லைபிட்டி படுகொலை 13.05.2006 (13 பேர் உயிரிழப்பு)
126 வடமுனைக் கண்ணிவெடி படுகொலை 07.06.2006 (10 பேர் உயிரிழப்பு)
127 வங்காலை குடும்பம் படுகொலை 08.06.2006 (4 பேர் உயிரிழப்பு)
128 கைதடி மனித புதைகுழி ஜூன் 2006 (4 பேர் உயிரிழப்பு)
129 பேசாலை தேவாலய படுகொலை 17.06.2006 (4 பேர் உயிரிழப்பு)
130 மயிலம்பாவெளி படுகொலை 27.06.2006 (3 பேர் உயிரிழப்பு)
131 முசலி படுகொலை 28.06.2006 (3 பேர் உயிரிழப்பு)
132 அக்சம்பெயிம் தன்னார்வ தொண்டு நிறுவன படுகொலை 05.08.2006 (17 பேர் உயிரிழப்பு)
133 நெடுங்கேணி ஆம்புலன்ஸ் தாக்குதல் 08.08.2006 (5 பேர் உயிரிழப்பு)
134 அல்லைபிட்டி ஏவுகணை தாக்குதல் 13.08.2006 (12 பேர் உயிரிழப்பு)
135 செஞ்சோலை குண்டுவீச்சு 14.08.2006 (54 பேர் உயிரிழப்பு)
136 பொத்துவில் படுகொலை 17.09.2006 (10 பேர் உயிரிழப்பு)
137 புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 16.10.2006 (4 பேர் உயிரிழப்பு)
138 கிளிநொச்சி மருத்துவமனை குண்டுவீச்சு 02.11.2006 (5பேர் உயிரிழப்பு)
139 வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படுகொலை 18.11.06 (4 பேர் உயிரிழப்பு)
140 கிழக்கு பகுதி படுகொலை 08,12.2006 (184 பேர் உயிரிழப்பு)
141 படகுத்துறை படுகொலை 02.01.2007 (15 பேர் உயிரிழப்பு)
142 மண்ணார் கல்வியாளர்கள் படுகொலை 27.02.2007 (2 பேர் உயிரிழப்பு)
143 படுவான்கரை படுகொலை 8,9.03.2007 ( 5பேர் உயிரிழப்பு)
144 சித்தாண்டி படுகொலை 29.03.2007 (6 பேர் உயிரிழப்பு)
145 செங்கலடி படுகொலை 14.04.2007 (5 பேர் உயிரிழப்பு)
146 சிலாவத்துறை கிளைமோர் தாக்குதல் 02.09.2007 (5 பேர் உயிரிழப்பு)
147 பெரியமடு ஏவுகணை தாக்குதல் 25.10.2007 (15 பேர் உயிரிழப்பு)
148 ரெட்டை செம்மணிகுலம் படுகொலை 11.11.2007 (3 பேர் உயிரிழப்பு)
149 தர்மபுரம் குண்டுவீச்சு 25.11.2007 (5 பேர் உயிரிழப்பு)
150 ஐயன்கன்குளம் கிளைமோர் தாக்குதல் 27.11.2007 (9 பேர் உயிரிழப்பு)
151 புலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல் 27.11.2007 (10 பேர் உயிரிழப்பு)
152 தட்சனமடு கிளைமோர் தாக்குதல் 29.01.2008 ( 20பேர் உயிரிழப்பு)
153 கிராஞ்சி குண்டுவீச்சு 22.02.2008 (9 பேர் உயிரிழப்பு)
154 முறிகண்டி கிளைமோர் தாக்குதல் 23.05.2008 (16 பேர் உயிரிழப்பு)
155 புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.06.2008 (4 பேர் உயிரிழப்பு)
156 மட்டக்களப்பு படுகொலை 11.07.2008 (4 பேர் உயிரிழப்பு)
157 வட்டமடு படுகொலை 16.10.2008 (4 பேர் உயிரிழப்பு)
158 கல்முனை படுகொலை 02.11.2008 5
159 மட்டக்களப்பு படுகொலை 26.11.2008 80 க்கும் மேல் உயிரிழப்பு)
160 வன்னி படுகொலை 31.12.2008 (5 பேர் உயிரிழப்பு)
161 முரசுமோட்டை படுகொலை 01.01.2009 (5 பேர் உயிரிழப்பு)
162 முரசுமோட்டை படுகொலை 01.01.2009 (10 பேர் உயிரிழப்பு)
163 முல்லைத்தீவு படுகொலை 02.01.2009 (4 பேர் உயிரிழப்பு)
164 தர்மபுரம் சந்தி படுகொலை 08.01.2009 (7 பேர் உயிரிழப்பு)
165 புதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009 (4 பேர் உயிரிழப்பு)
166 புதுக்குடியிருப்பு தாக்குதல் 16.01.2009 (5 பேர் உயிரிழப்பு)
167 புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009 (4 பேர் உயிரிழப்பு)
168 முல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009 (18 பேர் உயிரிழப்பு)
169 வன்னி படுகொலை 20.01.2009 (15 பேர் உயிரிழப்பு)
170 முல்லைத்தீவு படுகொலை 22.01.2009 (5) 23.01.2009 (5) (பேர் உயிரிழப்பு)
171 உடையார்கட்டு படுகொலை 24.01.2009 (12 பேர் உயிரிழப்பு)
172 சுதந்திரபுரம் படுகொலை 25.01.2009 21
173 வன்னி படுகொலை 28.01.2009 100 க்கும் மேல் உயிரிழப்பு)
174 உடையார்கட்டு படுகொலை 28.01.2009 (69 பேர் உயிரிழப்பு)
175 வன்னி படுகொலை 29.01.2009 (44 பேர் உயிரிழப்பு)
176 மூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படுகொலை 31.01.2009 (39 பேர் உயிரிழப்பு)
177 மூங்கிலாறு படுகொலை 1.02.2009 13 க்கும் மேல்
178 உடையார்கட்டு படுகொலை 02.02.2009( 9 பேர் உயிரிழப்பு) 04.02.2009 (50 க்கும் மேல் உயிரிழப்பு)
179 சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமெடு படுகொலை 05.02.2009 (5 பேர் உயிரிழப்பு)
180 புதுக்குடியிருப்பு படுகொலை 05.02.2009 100 க்கும் மேல் உயிரிழப்பு)
181 புதுக்குடியிருப்பு படுகொலை 07.02.2009 (61 பேர் உயிரிழப்பு)
182 மாத்தளன் படுகொலை 10.02.2009 36 க்கும் மேல் உயிரிழப்பு
183 புதுமாத்தான் படுகொலை 11.02.2009 (16 பேர் உயிரிழப்பு)
184 தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009 (75 க்கும் மேல் உயிரிழப்பு)
185 மாத்தளன் படுகொலை 18.02.2009 (108 பேர் உயிரிழப்பு)
186 ஆனந்தபுரம் படுகொலை 18.02.2009 50க்கும் மேல் உயிரிழப்பு)
187 இராணைப்பாலை படுகொலை 19.02.2009 (30 குடும்பங்கள் உயிரிழப்பு)
188 வன்னி பகுதிகளில் படுகொலை 21.02.2009 (39 பேர் உயிரிழப்பு)
189 புதுமாத்தான் படுகொலை 24.02.2009 (6 பேர் உயிரிழப்பு)
190 முல்லைத்தீவு படுகொலை 28.02.2009 (40) 01.03.2009 (37 பேர் உயிரிழப்பு)
191 முள்ளிவாய்க்கால் படுகொலை 02.03.2009 (45 பேர் உயிரிழப்பு)
192 மாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 03.03.2009 (13 பேர் உயிரிழப்பு)
193 முல்லைத்தீவு படுகொலை 04.03.2009 (73 பேர் உயிரிழப்பு)
194 பொக்கனை படுகொலை 04.03.2009 (25 பேர் உயிரிழப்பு)
195 மாத்தளன் படுகொலை 04.03.2009 (23 பேர் உயிரிழப்பு)
196 இரட்டை வாய்க்கால் படுகொலை 04.03.2009 (10 பேர் உயிரிழப்பு)
197 இராணைப்பாலை படுகொலை 04.03.2009 (23 பேர் உயிரிழப்பு)
198 ஆனந்தபுரம் படுகொலை 05.03.2009 (69 பேர் உயிரிழப்பு)
199 முள்ளிவாய்க்கால் படுகொலை 06.03.2009 (86 பேர் உயிரிழப்பு)
200 மாத்தளன் படுகொலை 07.03.2009 (53 பேர் உயிரிழப்பு)
201 முல்லைத்தீவு படுகொலை 08.03.2009 (71 பேர் உயிரிழப்பு)
202 அம்பைவன் பொக்கனை படுகொலை 09.03.2009 (74 பேர் உயிரிழப்பு)
203 வன்னி பகுதிகளில் படுகொலை 10.03.2009 (129 பேர் உயிரிழப்பு)
204 முள்ளிவாய்க்கால் படுகொலை 11.03.2009 (62 பேர் உயிரிழப்பு)
205 முல்லைத்தீவு படுகொலை 14.03.2009 (69 பேர் உயிரிழப்பு)
206 வன்னி பகுதிகளில் தாக்குதல் 15.03.2009 (58 பேர் உயிரிழப்பு)
207 பச்சைப்புல் மேட்டை, வலைஞர் மடம் படுகொலை 17.03.2009 (52 பேர் உயிரிழப்பு)
208 பொக்கனை, மாத்தளன் படுகொலை 19.03.2009 (39 பேர் உயிரிழப்பு)
209 முல்லைத்தீவு படுகொலை 20.03.2009 (45 பேர் உயிரிழப்பு)
210 மாத்தளன் படுகொலை 20.09.2009 (15 பேர் உயிரிழப்பு)
211 வன்னி பகுதிகளில் தாக்குதல் 21.09.2009 (42 பேர் உயிரிழப்பு)
212 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 22.09.2009 (32பேர் உயிரிழப்பு)
213 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 23.09.2009 (96 பேர் உயிரிழப்பு)
214 வலைஞர்மடம் படுகொலை 24.09.2009 (62 பேர் உயிரிழப்பு)
215 பொக்கனை படுகொலை 25.09.2009 (49 பேர் உயிரிழப்பு)
216 மாத்தளன் படுகொலை 26.09.2009 (17 பேர் உயிரிழப்பு)
217 மாத்தளன் படுகொலை 25.03.2009 (65 பேர் உயிரிழப்பு)
218 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 26.03.2009 (5 பேர் உயிரிழப்பு)
219 பொக்கனை, மாத்தளன் படுகொலை 27,28.03.2009 (179 பேர் உயிரிழப்பு)
220 மாத்தளன் படுகொலை 29.03.2009 (17 பேர் உயிரிழப்பு)
221 பொக்கனை படுகொலை 29.03.2009 (18 பேர் உயிரிழப்பு)
222 வலைஞர்மடம் படுகொலை 29.03.2009. (88 பேர் உயிரிழப்பு)
223 அம்பலவன் பொக்கனை மற்றும் வலைஞர்மடம் படுகொலை 31.03.2009 (45 பேர் உயிரிழப்பு)
224 பொக்கனை படுகொலை 29.03.2009 (18 பேர் உயிரிழப்பு)
225 புதுமாத்தளன் 1.04.2009 (33 பேர் உயிரிழப்பு)
226 புதுமாத்தளன் 02.04.2009 (31 பேர் உயிரிழப்பு)
227 புதுமாத்தளன் 03.04.2009 (25 பேர் உயிரிழப்பு)
228 புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை 04.04.2009 (71 பேர் உயிரிழப்பு)
229 பொக்கனை படுகொலை 08.04.2009 (129 பேர் உயிரிழப்பு)
230 வன்னி பகுதிகளில் தாக்குதல் 09.04.2009 (52 பேர் உயிரிழப்பு)
231 புல்மோட்டை படுகொலை 11.04.2009 (17 பேர் உயிரிழப்பு)
232 வன்னி பகுதி தாக்குதல் 12.04.2009 (30 பேர் உயிரிழப்பு)
233 முல்லைத்தீவு படுகொலை 16.04.2009 (57 பேர் உயிரிழப்பு)
234 முள்ளிவாய்க்கால் படுகொலை 17,18.04.2009 (60 பேர் உயிரிழப்பு)
235 வலைஞர்மடம் படுகொலை 21.04.2009 (7 பேர் உயிரிழப்பு)
236 வலைஞர்மடம் படுகொலை 23.04.2009 (14 பேர் உயிரிழப்பு)
237 முள்ளிவாய்க்கால் படுகொலை 26.04.2009 (64 பேர் உயிரிழப்பு)
239 முள்ளிவாய்க்கால் படுகொலை 09.05.2009 (1200 பேர் உயிரிழப்பு)
240 முள்ளிவாய்க்கால் படுகொலை 10,11.05.2009 (3200 பேர் உயிரிழப்பு)
241 இறுதிப்போர் படுகொலைகள் மே. 15,16,17 2009. மூன்று நாட்கள் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இறுதி யுத்தத்தில் மாத்திரம் 146679 பேர் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டனர்.
1971 சேகுவேரா போராட்டத்தின் போதும் அதன் தொடரச்சியாக 1989 வரையில் மலையக தமிழ் தோழர்கள் சிங்கள தோழர்கள் உற்பட 152000 மேற்பட்டவர்கள் பலியாகியும். பல இலட்சம் பெயர் காணாமல் ஆக்கப்படும். உலக வரலாற்றில் ஹிட்லருக்கு பின் படுமோசமான சித்திரவதைகள் செய்யப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.
இத்தனை தலைவர்களுடன் தொடர்ச்சியாக செயள்பட்ட ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்க. அதேநேரம் இலங்கையில் அதிக மனித படுகொலைகளுக்கு காரணமான கட்சிகள் யூன்பி கட்சியும் அதற்கு துனை நின்ற இனவாத கட்சிகளும் ஆயுத அமைப்புக்களும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

அதேசமயம் சகோதர படுகொலையினால் கொலையுண்ட போராளிகளின் எண்ணிக்கை இதற்குள் உள்வாங்கப்படவில்லை. ஜேவிபி கிளர்ச்சியின் போது கொலை செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களுடைய விபரங்களும் இதற்குள் இணைக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் போராட்டத்திற்காக செயற்பட்ட அணைத்து இளைஞர்களுமே மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
எனவே எதிர்காலத்தில் தமிழ் தேசியம் தொடர்பாகவோ அல்லது இலங்கையின் சமாதானம் தொடர்பாகவோ கதைக்கின்ற அல்லது செயற்பட போகின்ற தமிழ் கட்சிகளும், அரசாங்கங்களும் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வார்களா என்பது எங்கள் முன்னே இருக்கின்ற பெரியதொரு கேள்வியாக இருகின்றது.