இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள ராமர் பாலம் என்ற கருதப்படும் இடங்களில் இலங்கை தமது சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுத்துள்ளதாக இந்திய செய்தி ஒன்று கூறுகிறது.
சுற்றுலா மேம்பாட்டுக்காக சில மணல் திட்டுக்களை தனியார் பயன்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30 மணல் திட்டுக்களை சுற்றுலாவுக்கு பயன்படுத்த இலங்கை உத்தேசித்துள்ளதாகவும் இந்திய ஊடகம் கூறியுள்ளது.
இதற்கிடையில் இந்த திட்டம், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் குறித்த இந்திய ஊடகம், ஊடகவியலாளர் ஒருவரை கோடிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.