பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் அவரை கிளிநொச்சிக்கு அழைத்த போது அவர் கொன்றுவிடுவார் என்று தப்பி ஓடிய நபர்தான் இந்த கருணா. விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இருந்தார், அவர் கருணாவை விட திறமையானவர், அவருடன் நாம் கிழக்கில் போரிட்டோம்.
பலகல்ல என்ற எமது இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திரிக்காவுக்குத் தெரியாமல் கருணாவை கொண்டு வந்து கொழும்பில் ஒளித்து வைத்தார், அதனால் அரசு அவரை பணி நீக்கம் செய்தது.

இதேவேளை பிள்ளையான் 150 பேருடன் சுங்காவில் பகுதியில் முகாமொன்றில் இருந் தார்.நாங்கள் அவர்களை எம்மிடம் சரணடையுமாறு கோரினோம். அவ்வாறு சரணடைந்தவர்களில் 80 பேர் வரையிலானோர் 13 வயதுக்கும் குறைவானவர்களாகவே இருந்தனர்.

அவர்கள் ஐசிஆர்சியிடம் ஒப்படைத்தோம். எஞ்சியவர்களை நாங்கள் பாதுகாப்பு வழங்கி பார்த்துக்கொண்டோம். ஆனால் பிள்ளையான் யுத்தம் செய்யவில்லை, ஆட்கடத்தல்கள் செய்துள்ளார். ராஜபக்ச காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம்.
இப்போது இவர்களை வீரர்கள் என்று கம்மன்பில போன்றோர் கூறுகின்றனர். கம்மன்பில எதுவும் தெரியாதவர். யுத்த காலத்தில் எங்கேயே இருந்தவர் இப்போது வந்து ஏதோ கூறுகின்றார்.
பிள்ளையான்தான் யுத்தத்தில் உத்தரவுகளை வழங்கினாரா? இப்படியான ஒருவரை வீரர் என்று கம்மன்பில போன்றவர்கள் கூறுவது தெற்கில் உள்ளவர்களுக்கே வெட்கமானது.

பிள்ளையானிடம் எவ்வளவு சரி பரித்துக் கொள்வதற்காக நீங்கள் வீரர் என்றும், உங்களின் சட்டத்தரணி என்றும் கதைக்கின்றனர். இவர்கள் சேட் அணிந்திருந்தாலும் கீழே அணிந்துகொண்டுதான் இவ்வாறு கூறுகின்றனரா? என்று கேட்கவேண்டியுள்ளது.
பிள்ளையான் , கருணா இருவரும் ஊழல் செய்துவிட்டு புலிகளுக்கு பயத்தில் அங்கிருந்து ஓடி வந்தவர்கள், இவர்கள் வீரர்கள் இல்லை.
என்று சரத் பொன்சேகா கடந்த கிழமை சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்