காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன்13ஆவது திருத்தச் சட்டத்தை அதன் அசல் வடிவிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது பரிந்துரையை முன்மொழிந்துள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் 15ஆம் திகதிக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கட்சிகளை கேட்டிருந்தார். இதற்கிணங்க ரெலோ, புளொட் தலைமையில் இயங்கும் ஐந்து கட்சிகள் கொண்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பரிந்துரையை ஓர் ஆவணமாக நேற்று முன்தினம் கையளித்துள்ளது.
ஜனாதிபதி பணிமனையின் அதிகாரியான ஆஷ மாரசிங்கவிடம் அந்த ஆவணத்தை புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அந்தக் கடிதத்தில்,“நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளைஉள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்
கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/ PCA/03-iii 2023 ஓகஸ்ட் 2ஆம் திகியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி எங்கள் கருத்துகளை முன்வைக்க விரும்புகிறோம்.
“ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13ஆம் திருத்தம் அரசமைப்பில் இணைக்கப்பட்டது, அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப்படும் வரை
செயல்பட்டன.
“எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசமைப்பின் ஒரு பகுதியாகஇருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துகளை கோர வேண்டியஅவசியமில்லை. எவ்வாறாயினும்,
13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள்திட்டமிட்ட வகையில் காலத்துக்குக்காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.
“மாகாண சபைகளில் இருந்து மீளப்பெறப்பட்ட அந்த அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13ஆம்திருத்தத்தை அதன் அசல் வடிவில்
நடைமுறைப்படுத்த நாங்கள் முன்மொழிகிறோம்” – என்றுள்ளது. தற்போது, ஜனநாயக தமிழ்த் தேசியகூட்டணி என்ற கட்சி பெயரில்இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, புளொட் கட்சிகளுடன் ஈ. பி. ஆர். எல். எவ்., தமிழ்த்தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பன அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.