அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெப்பமான காலநிலை காரணமாக அமெரிக்காவில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பத்தினால் அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசோனா மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெவாடாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும். டெக்சாஸ் மாகாணத்தை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.