Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குவே, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு தாங்காமுடியாத அரிப்பு மற்றும் வயிறு கோளாறு காரணமாக, அந்த சிறுமி தன்னுடைய தந்தையுடன் கடந்த 18 ஆம் திகதியன்று விஹாரைக்கு சென்று பிக்குவை சந்தித்துள்ளனர்.

அன்றைய தினம் தேசிக்காயை வெட்டி, ஏதோ மந்திரம் செய்த பிக்கு, மறுநாள் வருமாறு கூறி, வரும்போது, வெட்டிய தேசிக்காயையும் எடுத்துவருமாறு, தேசிக்காயையும் கொடுத்து அனுப்பி​யுள்ளார்.

அதேபோல், மறுநாளும் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு தந்தை, விஹாரைக்கு சென்றுள்ளார்.

இருவரையும் அமர சொன்ன பிக்கு, தேசிக்காயை வெட்டி வழிந்தோடும் நீரில் வீசி விட்டு வருமாறு தந்தையிடம் கூறியுள்ளார்.

பிக்கு கூறியதை அடுத்து, தேசிக்காயை எடுத்துக்கொண்டு, விஹாரையில் இருந்து தந்தை வெளியே சென்றுள்ளார்.

அப்போது, சிறுமியை தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிக்கு, அங்கு வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

தந்தை திரும்பி வந்தபோது, பிக்கு வசிக்கும் வீட்டில் இருந்து மகள் வெளியே வந்துள்ளார்.

தந்தையும் என்ன?என்ன? என்று கேட்டபோது, மகள் ஒன்றுமே கூறவில்லை.

எனினும், வீட்டுக்கு வரும் வழியில் தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், தந்தை செவனகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்பின்னர் 42 வயதான பிக்கு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுமி, அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வசூல்ராஜா MBBS என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை; சபையில் தன் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்த அர்ச்சுனா

வசூல்ராஜா MBBS என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை; சபையில் தன் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்த அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு