சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வந்தாறுமூலை கிழக்கு சக்தி விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்த கிராமிய விளையாட்டு நிகழ்வில் இறுதி நாள் நிகழ்வு கடந்த (20) சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
(19) திகதி காலை மரதன் ஓட்ட நிகழ்வும், ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் ஓட்ட நிகழ்வு என்பன நடைபெற்றன. இவ் சைக்கிள் ஓட்டப் போட்டியில் நாட்டின் பல பாகத்திலும் இருந்தும் சைக்கிள் ஓட்ட வீரர்கள் பங்கு பற்றியிந்தனர்.

இதன்போது சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள்,ஆண் மற்றும் பெண் என இரு பாலாருக்குமான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதிலும் குறிப்பாக கிறிஸ் மரம் ஏறுதல், தலையனைச் சமர், நிறமுட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி என பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.
போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதேசமயம் வருடா வருடம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வந்தாறுமூலை சக்தி விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவது வழக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.













