கொழும்பிலிருந்து திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த விமானப் பயணிடமிருந்து ரூ. 9 கோடி மதிப்புள்ள 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் ரூ.9 கோடி மதிப்பிலான 10 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப் பொருளை தனது உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த பயணியை கைது செய்ததோடு தொடர் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.