இலாபமீட்டும் மற்றும் தரமான சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறும் நபர்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
தற்போது காணப்படும் 107 டிப்போக்களில் 60 வரையான டிப்போக்கள் மூலம் மாத்திரமே இலாபம் கிடைப்பதாக பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.